அறிமுகமே அட்டகாசமாக இருக்கிறது இந்த புத்தகத்தில்.
அலெக்ஸ் ரெகோஒரு பிளான்ட்டின் மேனேஜெர். ஒரு நாள்
அதி காலை பிளான்ட்க்கு வரும் அவர்,அவருடைய பாஸ் ஏற்கனவே அவருடைய அறையில் இருப்பதை கேள்விப்பட்டு பதட்டத்துடன் அவர் அறைக்கு செல்கிறார்.
பாஸின் கெடு
==============
பில் பீச் தான் ரெகோவுடைய பாஸ். கறாரான பேர்வழி. வேலை ஆகவேண்டும் இல்லை என்றால் வெட்டி விடவேண்டும் என்ற பாலிசி உள்ள ஆள். அவர் காலங்கார்த்தால தன் அறையில் இருக்கிறார் என்றால் ஏதோ ப்ராப்ளம். அந்த ப்ராப்ளம் ரெகோவுக்கு தெரிந்தே இருக்கிறது. அவனுடைய பிளான்ட் நஷ்டத்தில் இருக்கிறது. அது மொத்த கம்பெனிக்கும் பெரிய ப்ராபளமாகிக் கொண்டிருக்கிறது என்று ரெகோவுக்கும் தெரியும்.
பில் பீச், ரெகோ உட்காரும் சேரில் அட்டகாசமாக உட்கர்ந்து கொண்டு இருந்தது ரெகோவின் கோபத்தை மண்டைக்கு ஏற்றியது.
ரெகோ: (கோபத்துடன்) அது என் சேர்
பில் : உன் பிளான்ட்டே மூழ்கிக் கொண்டிருக்கிறது உன் சேரை பற்றி கவலை படுகிறாய். இன்றிலிருந்து மூணு மாதத்தில் இந்த பிளான்ட்டை லாபத்தில் நடத்தா விட்டால் இந்த பிளான்ட்டை மூட நான் CEO விடம் பரிந்துரை செய்து விடுவேன்.
ரெகோ: மூணு மாத அவகாசம் ரொம்ப குறைவு.
பில் : ஆனால் உன் பிளான்ட்டை விட நம் கம்பெனி முக்கியம். மூணு மாதம். மூணே மாதம்.
என்று சொல்லியவாரே பில் போயே போய் விட்டான்.
ரெகோவுக்கு இடி விழுந்தால் போல இருந்தது. இதை எப்படி சமாளிக்க போகிறேன் என்று நினைத்தவாரே ஜன்னலின் வழியே பார்த்தான். தொழிலாளர்கள் சுறுசுறுப்புடன் வேலை பார்த்துக் கொண்டிருந்தது
தெரிந்தது. தான் இந்த பிளான்ட்டை லாபத்தில் நடத்தாவிட்டால் தன் வேலை மட்டுமல்ல தன் கீழே வேலை பார்க்கும் அனைத்து தொழிலாளிகளுக்கும் வேலை போய் விடும். அவர்களது குடும்பங்களும் நடுத்தெருவில் நிற்கும். கடவுளே என்று கடவுளை கூப்பிடுவதை தவிர வேறெதுவும் தெரியவில்லை.
தெரிந்தது. தான் இந்த பிளான்ட்டை லாபத்தில் நடத்தாவிட்டால் தன் வேலை மட்டுமல்ல தன் கீழே வேலை பார்க்கும் அனைத்து தொழிலாளிகளுக்கும் வேலை போய் விடும். அவர்களது குடும்பங்களும் நடுத்தெருவில் நிற்கும். கடவுளே என்று கடவுளை கூப்பிடுவதை தவிர வேறெதுவும் தெரியவில்லை.
=======================================================================
இப்படி ஒரு சம்பவம் நம் வாழ்க்கையில் நடந்தால் நாம் என்ன செய்வோம். உடனே ஜாப் சைட்டில்வேலை தேட ஆரம்பித்து விடுவோம் அல்லது நம் பிரண்ட்சுக்கு போன் பண்ணி "மச்சான் உன் கம்பெனியில் எனக்கு ஒரு வேலை பார்த்து கொடுடா" என்று ஆரம்பித்து விடுவோம். ஆனால் ரெகோ அப்படி செய்யவில்லை. அவர் தன் பிளான்ட்டை நேசித்தார். என்ன ஆனாலும் இந்த பிளான்ட்டை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்தார். தன் பிளான்ட்டை எப்படி தன் காலேஜ் ப்ரொபசர் ஜோனா உதவியுடன் எப்படி காப்பாற்றினார் என்பதே கதை.
இது ஒரு நாவல் + மேலாண்மை சம்பந்தமான புத்தகம் . மேலாண்மை சம்பந்தமான புத்தகம் என்றால் அட்வைசாக அள்ளி தெளித்து விட்டிருப்பார்கள். ஆனால் இந்த புத்தகம் ஒரு நாவலும் கூட என்பதால் மிக எளிதாக விளங்குகிறது. எடுத்தால் கீழே வைக்க முடியாத அளவு எழுத்து நடை. விகடனில் தொடர் கதையாக வந்த போதே இதை படித்தேன். புத்தக கண்காட்சியில் இப்போது வாங்கினேன். ஷ்யாமின் வண்ண ஓவியங்களுடன் மிக நன்றாக இருக்கிறது.
ஏன் படிக்கவேண்டும் : எந்த ஒரு பெரியவேலையுமே சின்ன சின்ன வேலைகளால் ஆனது. இந்த சின்ன சின்ன வேலைகள் எப்படி பெரிய வேலை முடிவடைவதை கட்டுபடுத்து கிறது என்பதே எந்த புத்தகத்தின் அடி நாதம். நாம் நம் வேலை ஏன் சொன்ன நேரத்தில் முடிவடைய வில்லை என்பதை தோண்டி துருவும்போது இந்த புத்தகத்தை எடுத்து படித்தால் விடை கிடைக்கும். Theory of constraints பற்றியும் bottle neck centers பற்றியும் புட்டு புட்டு வைத்திருக்கிறார்.
உதாரணத்துக்கு ஒரு கார் கம்பெனியில் ஒரு காரை உருவாக்க ஆயிரக்கணக்கான உதிரி பாகங்கள் தேவை. இதில் ஒரு உதிரி பாகம் இல்லை என்றால் கூட கார் முழுமை அடையாது . ஒரு உதிரி பாகத்துக்காக ஒரு காரை விற்பனை செய்யகூடிய வாய்ப்பு போய்விடுகிறது. ஒரு இல்லாத உதிரி பாகம் கார் விற்பனை ஆவதையே தடுத்து விடுகிறது.
இப்போது அந்த கார் கம்பெனியில் எல்லோரும் ஓவர் டைம் போட்டு அந்த ஒரு பாகத்தை தவிர மற்ற பாகங்களை உருவாக்கினால், அந்த கம்பெனி நல்ல நிலைமையில் போய்க் கொண்டிருப்பதாக அர்த்தமா? அதாவது அந்த கம்பனியின் கோல் என்ன என்று தெரியாமல் அவரவர் வேலையை செய்தால் அந்த
கம்பெனி உருப்பட முடியாது . அந்த கம்பெனியின் கோல் காரை விற்பது. இது எல்லாருக்கும் புரிந்தால் இல்லாத பாகத்தின் முக்கியத்துவம் எல்லாருக்கும் தெரியும்.
நம் எல்லோருடைய வாழ்கையிலும் இந்த புத்தகத்தில் சொல்லி இருப்பதை செயல் படுத்த முடியும் என்பது இந்த புத்தகத்தின் சிறப்பு.
எழுதியவர் : கோல்ட்ராத் இலியாஹு
இவர் ஒரு இஸ்ரேல் நாட்டு மேலாண்மை குரு. மேலாண்மையில் இவர் எழுதிய புத்தகங்கள் சக்கை போடு போடுகின்றன. பல நிறுவனங்களை இவர் தன் மேற்பார்வையில் முன்னேற்றி இருக்கிறார். 2011 ம் ஆண்டு காலமானார்.
தமிழில் : அஞ்சனா தேவ்
பிரசுரம் : விகடன்
பிரசுரம் : விகடன்
விலை : ரூ 110
=======================================================================
நல்லா எழுதியிருக்கிறீங்க! ஏற்கனவே விகடனில் தொடராகப் படித்திருக்கிறேன்.
ReplyDeleteI too have already read it when it came in Anandavikadan. Nice !!
ReplyDeleteநண்பரே! 'தினந்தோறும் ஒரு தவளை' என்ற புத்தகத்தை எழுதியது யார் ? எந்தப் பதிப்பகம்? போன்ற விவரங்களை தெரியப்படுத்தினால் உபயோகமாக இருக்கும்!
ReplyDelete"Eat the Frag" என்ற புத்தகத்தின் தமிழ் பதிப்பு தான் இது. Tata MCrawHill publications பிரசுரம்.
ReplyDeleteInteresting. Want to read this book. Pl. contact me over mail if possible I am also a blogger from Chennai
ReplyDelete