Tuesday, March 20, 2012

நாட்டு நடப்பு : ரயில்வே ஸ்மார்ட் கார்டு



கடந்த வாரம் குடும்பத்துடன் பல்லாவரம் போக வேண்டி இருந்ததால், ரயிலில் போக முடிவெடுத்தோம். மாலை 5.30 மணி அளவில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் போனால் டிக்கட் எடுக்க மூணு வரிசையில், ஒவ்வொரு வரிசையிலும் மினிமம் அம்பது பேர் இருந்தனர். நானும் ஒரு அனுமார் வாலில் போய் ஜாயின் பண்ணி கொண்டேன். எனக்கு முன்னால் ஒரு T - Shirt போட்ட இளம் பெண். என் மனைவி "நாங்கள் பிளாட்பார்மில்  வெயிட் பண்ணுகிறோம், ஒழுங்கா (இதுக்கு மட்டும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து) டிக்கெட் வாங்கிட்டு வாங்க என்று முன்னாள் இருக்கும் இளம் பெண்ணை பார்த்த படியே சொல்லி விட்டு சென்றார்.

அழகான இளம் பெண்ணாக மட்டும் பிறக்க கூடாது. க்ராஸ் ஆகும் ஒவ்வொரு ஆணும் அந்த பெண்ணை நன்றாக பார்த்து விட்டுதான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர். எஸ்க்யுஸ்  மி என்று இரு பெண்கள் எங்களை கடந்து சென்றனர், வரிசையில் முந்தி நுழைந்து விடப்போகின்றனரோ என்று பார்த்தால் ஒரு மிசின் முன்னால் போய் நின்று ஒரு கார்டை வைத்து டச் ஸ்க்ரீனில் ஏதோ செலக்ட் பண்ணி ஓர் பிரிண்ட் அவுட் எடுத்து கொண்டு போய் விட்டனர். விசாரிக்கும் போது அது புதிதாக வந்திருக்கிற SMART கார்டு என்றார்கள். இது நான் சிங்கப்பூரில் இருக்கும் போது தினம் யூஸ் பண்ணியதுதான். சிங்கப்பூரில் மனித வளம் குறைவு அதனால் முடிந்த வரை ஆட்டோமேட் பண்ணி விடுவார்கள்.

எப்படி வாங்குவது 

நான் டிக்கெட் வாங்கும்போதே  கார்டையும் வாங்கி விட்டேன். சென்னையில் இருக்கும் எல்லா ரயில் நிலையங்களிலும் கொடுகிறார்கள். ரூ 100 கட்டி இந்த கார்டை வாங்கினால் ரூ 50 செக்யூரிட்டி டெபாசிட் மற்றும் ரூ 52 இல் டிக்கெட் வாங்கி கொள்ளலாம்.    
 
இதனால் என்ன நன்மை.

கியூவில் நிற்க தேவை இல்லை.  நேராக அந்த மிசினுக்கு சென்று கார்டை அதற்கு உரிய இடத்தில வைத்து விட்டு தற்போதய ஸ்டேஷன் மற்றும் செல்ல வேண்டிய ஸ்டேஷன் செலக்ட் பண்ணினால், உங்கள் கார்டில் இருந்து உரிய அமௌண்டை எடுத்துக் கொண்டு டிக்கெட்டை கொடுத்து விடும்.

மிசின் எங்கெல்லாம் இருக்கிறது 

எனக்கு தெரிந்த வரை பல்லாவரம், மாம்பலம், நுங்கம்பாக்கம், எக்மோர் ரயில் நிலையங்களில் உண்டு. மற்ற நிலையங்களில் இருக்க நிறைய சான்ஸ் உண்டு. பார்த்தவர்கள் பின்னூட்டத்தில் பகிரவும்.

என்ன பிரச்னை வரலாம் 

மிசின் ரிப்பேர் ஆகி ரயில்வே நிர்வாகம் அதை சரி செய்ய தாமதம் ஆனால் திரும்ப கியுக்கு வரவேண்டிய கட்டாயம் மட்டுமே.

ஆனால் துணிந்து வாங்கிவிட்டேன், இது மாதிரியான Technology improvement ஐ நாம் வரவேற்க வேண்டும்.  வரவேற்றால்தான் அரசும் இது மாதிரியான திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும். 

இந்த கார்டை திரும்ப ரயில்வே கவுன்டரில் கொடுத்து பணத்தை திரும்ப வாங்கிகொள்ளும் வசதியும் உண்டு.

3 comments:

  1. நீங்கள் கார்ட் வாங்கிய உடன் எழுதி உள்ளீர்கள். நான் வாங்கி "அவஸ்தைப்பட்டு விட்டு" ஒரு பதிவு எழுதி உள்ளேன். இந்த லிங்கில் வாசிக்கவும்

    http://veeduthirumbal.blogspot.in/2011/11/blog-post_23.html


    பீச் டு தாம்பரம்; மற்றும் வேளச்சேரி டு பீச் இரு ரூட்களிலும் அனைத்து நிலையங்களிலும் இந்த மெஷின் உண்டு.

    இன்னும் இந்த கார்ட் வைத்துள்ளேன். அவ்வப்போது மக்கர் பண்ணுவது மட்டுமல்ல. சென்ற முறை எடுத்த போது ஒரு டிக்கெட்டுக்கு பதில் ஒரு அடல்ட் ஒரு சைல்ட் என தானாகவே வந்து விட்டது. ஒரு சைல்டு டிக்கெட்டை யாரிடம் போய் விற்பது? ரிட்டர்ன் டிக்கெட் வேறு ! இப்படி அவ்வபோது படுத்தினாலும் பாதி நேரமாவது கூட்டத்தில் நிற்காமல் டிக்கெட் எடுக்க முடிகிறது

    ReplyDelete
  2. நன்றி மோகன் குமார் ! எனக்கு இன்னுமொரு சந்தேகம் அவர்களுடய வேலை போய் விடும் என்ற பயத்தினால் மிசின் ரிப்பேர் ஆனாலும் கண்டுக்காம இருந்துராங்களோ ?

    ReplyDelete
  3. நல்ல பகிர்வு. எல்லோரும் இதைப் பயன்படுத்த வேண்டும். ஆனால், ஏனோ இதில் பலருக்கு நாட்டமில்லை.

    இன்னும் இயந்திரத்தை நம்பும் அளவுக்கு நம் மக்கள் மாறவில்லை, இயந்திரமும் மக்களின் நம்பிக்கையைப் பெறவில்லை என்பதுதான் உண்மை.

    ReplyDelete