Tuesday, May 22, 2012

அடங்காத மகனும் அருப்புகோட்டை பயணமும்




அருப்புகோட்டையில் இருக்கும் என் அம்மாவை கூட்டிகொண்டு என் அக்கா வீட்டில் விடுவதற்காக பொதிகையில் சனிக்கிழமை சென்றேன். சீட்டை தேடி பிடித்து உட்கார்ந்த பிறகு பார்த்தேன்,  என் எதிரில் ஒரு அம்மா இருந்தார்கள். திடீரென்று ஒரு கை அப்பர் பெர்த்தில் இருந்து ஒரு தண்ணீர் பாட்டிலை அந்த அம்மா விடம் கொடுத்தது. அந்த அம்மா வாங்கி வைத்து கொள்வார்கள் அல்லது, தண்ணீர் குடிப்பார்கள்  என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் அதை திறந்து திரும்பவும் இந்தாப்பா என்று மேலே கொடுத்தார்கள். சரி ஏதோ ஐந்தாவது அல்லது ஆறாவது படிக்கும் பையன் போல இருக்குது, அதனால்தான் இவர்கள் திறந்து கொடுகிறார்கள் என்று நினைத்தேன். அவன் இறங்கி வந்த போது பார்த்தால் காலேஜில் முதல் அல்லது இரண்டாம் ஆண்டு படிக்கும் பையன் போலிருந்தான்.அவனுக்கு ஒரு தண்ணி பாட்டிலை ஓபன் செய்ய   கூடவா தெரியாது? வந்தவுடன் அந்த அம்மா பக்கத்தில் உட்கார்ந்து வசதியாக என் பக்கத்தில் காலை நீட்டிக் கொண்டான். 

கடுப்பு #1 
எனக்கு எதிர் சீட்டில் காலை வைப்பது பிடிக்காது. எதிரில் பக்கத்தில் ஆள் உட்கார்ந்து  இருந்தாலும் காலை வைத்துக் கொண்டிருப்பது பிடிக்கவில்லை. இருந்தாலும் ஒன்றும் சொல்லவில்லை. அவன் அம்மா கேட்க்கும் கேள்விகளுக்கு அலட்சியமாக பதில் சொல்லிக் கொண்டு வந்தான். 

கடுப்பு #2 
இப்போது தண்ணீர் பாட்டில் அந்த அம்மாவிடம் இருந்தது. அவன் சொடக்கு போட்டு அம்மாவை கூப்பிட்டு தண்ணீர்  வேண்டும் என்று சைகையில் கட்டினான். எனக்கு சுர்ரென்று கோபம் ஏறியது. அந்த அம்மாவும் ஒன்றும் சொல்லாமல் தண்ணீர் பாட்டிலை அவனிடம் கொடுத்தார்கள். அந்த இடத்திலேயே அவனை கிழி கிழி என்று கிழித்து விடலாம் என்ற கோபத்தை கட்டுபடுத்தி கொண்டேன். 

எனக்கென்னமோ அவன் மேல் குற்றம் இருப்பதாக தெரிய வில்லை. இந்த மாதிரி ட்ரீட் பண்ணும் மகனை நாலு பேர் முன்னாலேயே "நான் என்ன உன் வீட்டு நாயா சொடக்கு போட்டு கூப்பிடுற?" என்று நடு தெருவில் வைத்து கிழி கிழி என்று கிழித்தால் அவன் நாளைக்கு அந்த மாதிரி கூப்பிடுவானா? 

அடுத்த ஸ்டாப்பில் அவன் கிழே இறங்கி கோக் வாங்க சென்றான். மெதுவாக அந்த அம்மாவிடம் "அவன் உங்க பையனாமா? என்று கேட்டேன். அதற்க்கு ஆமாம் என்றார்கள். "என்னம்மா இது சொடக்கு போட்டு தண்ணி கேக்குறாரு 
நீங்களும் ஒன்னும் சொல்லாம குடுக்கிறீங்க" என்றேன். "வீட்டிலேனா கண்டிப்பேன், இங்க எப்பிடி?" ன்னு சொன்னார்கள். "நம்ம பிள்ளைங்களுக்கு நாமதான் நல்லது பொல்லது சொல்லி வளர்க்கணும், இல்லையினா பின்னால வருத்த  படுற  மாதிரி ஆயிடும்" என்றேன். 

எனக்கு அந்த அம்மா வீட்டிற்க்கு சென்று கண்டிக்கிற மாதிரி தெரிய வில்லை.  இப்படி மகனிடமும், கணவனிடமும் 
தன்மானத்தை விட்டு விட்டு வாழும் கோடி கணக்கான பெண்களில் அந்த தாயும் ஒருத்தி.   

Tuesday, May 15, 2012

எழுத்தாளர் பாலகுமாரனின் புகை அனுபவமும் பின்ன நானும்



நான் புகை பிடிப்பதில்லை என்றாலும்தொடவே இல்லை என்று சொல்ல 
முடியாதுநான் +2 வரை  என் ஊரான அபிராமத்தில் படித்தேன். என் அப்பா 
பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் தலைமை ஆசிரியர். அம்மா இஸ்மாயில்
ஸ்கூலில் உதவி தலைமை ஆசிரியை. அப்பா, அம்மாவுக்கு தெரிந்தவர்கள்
அதிகம். அது சின்ன ஊர். எல்லோரையும் எல்லோருக்கும் தெரியும். புகையை உள்ளே இழுத்து வெளியே விடுவதற்குள் அவர்களுக்கு சேதி போய்விடும்.

அதனால் நான் பள்ளி முடியும் வரை புகையை தொடாமலே இருந்தேன்
மதுரை S .V . N கல்லூரியில் Chemistry சேர்ந்தேன். அங்கு hostel இல் இருந்த
மக்கள் கேட்ட போது கூட எனக்கு பழக்கம் இல்லை என்று மறுத்த நான்,
புகைக்க ஆசைப்பட்டது ஒரு படத்தை பார்த்து. அண்ணாமலை படத்தில்
ரஜினி ஒரு சிகரட் பிடித்து கொண்டு வருவார்ரொம்ப  ஸ்டைல் ஆன இடம் அது. Moore  சிகரட் என்று பெயர்.  ராயல் பிரவுன் கலரில தங்க நிற  வளையத்துடன் இருக்கும். என் நண்பன் ஒருவன்அது பொம்பளை குடிக்கிற
சிகரட் என்றான். போடா தலைவரே குடிசிருக்காறுன்னு சொல்லிட்டு வாங்கினேன். அந்த சிகரட் எல்லா கடையிலும் கிடைக்காது.அதற்கென்று  மதுரை சென்று  ஒரு கடையில் வாங்கிமனதுக்குள் தலைவரை நினைத்து கொண்டு இழுத்தால் புகை வெளியே வரவில்லைஇருமல் தான் வந்ததுசரி 
இந்த சிகரட் தான் இப்டின்னு வேற  ஒரு சிகரட் எடுத்தால் அதுவும்  அதே
கதை.சரி கழுத, காசக் குடுத்து இருமல் வாங்குவானேன் என்று அறச்சீற்றம் கொண்டேன்விட்டதடி ஆசை விளாம்பழம் ஓட்டோட என்பார்கள், எனக்கு விட்டதடி ஆசை moore    சிகரெட்டோட என்று நினைத்து கொண்டேன். இப்போது நினைத்தால் எவ்வளவு பெரிய ஆபத்தில் இருந்து தப்பித்திருகிறேன் என்று தெரிகிறதுஎல்லோராலும் புகை பழக்கத்தை விட முடியாதுஏனென்றால் 
நம்மை டெம்ப்ட் பண்ண நிறைய புகைக்கும் ஆட்க்கள் நம்மை சுற்றி
இருக்கிறார்கள்அதனால் அதை தொடாமல் இருப்பதே நல்லது.

என் பிரியமான பாலகுமாரன் அவருடைய  புகை அனுபவத்தை தினகரனில் 
எழுதியிருக்கிறார் படியுங்கள்.  நிச்சயம்  உங்கள் மனதில் மாற்றம் வரும்.


Thursday, May 10, 2012

ரகளையான ரஹிலா பேகம்


டிவியில் சில நிகழ்ச்சிகளை பார்க்கும் போது நிகழ்ச்சி நடத்துபவர்களை விட  அதில் பங்கு பெறுபவர்கள் தங்களின் தனி திறமையால் அந்த  நிகழ்ச்சியை  வேறு ஒரு தளத்துக்கு எடுத்து செல்வார்கள்.அதற்கு உதாரணமாக  சிவகர்த்திகேயனை சொல்லலாம். ஜெயிக்க போவது யாரு நிகழ்ச்சியில் வந்து தனக்கென ஒரு இடத்தை சின்ன திரையிலும், வெள்ளி
திரையிலும் பிடித்துள்ளார்.

"நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சியில் சில சமயம் அப்படி சிலர்  வருவதுண்டு. நேற்று நான் வீட்டில் நுழையும் போதே என் மகன் அருள்
 "அம்மா பேகம் தான் வரணும்" என்று சொன்னான். ஏறிட்டு பார்த்தால்
 டிவியில் "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சியில்
விளையாடுபவர்களை தேர்ந்தெடுக்க ஒரு மொக்கையான கேள்வியை
கேட்டு தேர்ந்தெடுப்பது நடந்து கொண்டிருந்தது. அருள்
நினைத்தபடி ரஹிலா பேகம்தான் மூணு வினாடியில் சொல்லி 
விளையாட தேர்ந்தெடுக்க பட்டார்.

பார்த்தால் கல்லூரி மாணவி மாதிரியான தோற்றம். ஒரு குழந்தைக்கு தாய்.
கணவர் மற்றும் அம்மாவுடன் வந்திருந்தார். அவர் பற்றிய கிளிப்
ஒளி பரப்பினார்கள்.சும்மா கிழிச்சு எடுத்திருச்சு, பஞ்ச் டயலாக்ஸ் வேற.
கிளிப் கடைசியில் "ஏ நானும் ரவுடி தான், நானும் ரவுடி தான்   நானும்
"நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி"  கழ்ச்சியில் கலந்துக்க போறேன்னு 
சொன்னது தான் ஹை லைட்.

சூர்யா இந்த ஷோவில் இப்படி சிரிச்சு பார்த்ததில்லை. சில பஞ்ச் டயலாக்ஸ்
1 ) பத்தாயிரம் உறுதி பணம் முடித்தவுடன் "நல்ல வேளை பத்தாயிரமாவது 
     கிடைக்கும், இல்லேனா  எதிர் கட்சிக்காரன் பார்த்தா என்ன நினைப்பான்".
2 ) தன் குடும்பத்தை பற்றி சொல்லிவிட்டு "பாமிலி டோடல் டேமேஜ்"              
3 ) தன் கணவர் ரொம்ப கேள்வி கேட்டுக்கொண்டு இருப்பார் என்று சொல்லி 
     விட்டு "இப்படிதான்ஒரு தடவை சுடிதார கண்டுபிடிச்சது  யாருன்னாரு,   
     என்னலேயே முடியலேன்ன பார்த்துக்கோங்க"

இவர் ஒரு சினிமா பிரியர். மொக்க படமாக இருந்தாலும் டைட்டிலில்
 இருந்து வணக்கம் போடும் வரை பார்ப்பவர். பாரதியாரின் பாடல்கள் பிடிக்கும்.
நிறைய புத்தகங்களை படித்திருக்கிறார். சூர்யா "இவர் ஒரு என்ட்டர்டெய்னர்" 
என்று ஒன்றுக்கு இரண்டு முறை நேற்று ஷோவில் சொன்னார்.நேரம் 
இல்லாததால் இன்றும்  இவருடைய  ரகளை தொடரும். என்னால் 
முடிந்தவரை என் எழுத்தில் இவர் ரகளையை கொண்டு வந்திருக்கிறேன். 
இது சும்மா ட்ரைலர். மெயின்  பிக்சர் இன்னைக்கு "நீங்களும் 
வெல்லலாம் ஒரு கோடி"  நிகழ்ச்சியில் பாருங்க. மறக்காம !