Tuesday, May 15, 2012

எழுத்தாளர் பாலகுமாரனின் புகை அனுபவமும் பின்ன நானும்



நான் புகை பிடிப்பதில்லை என்றாலும்தொடவே இல்லை என்று சொல்ல 
முடியாதுநான் +2 வரை  என் ஊரான அபிராமத்தில் படித்தேன். என் அப்பா 
பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் தலைமை ஆசிரியர். அம்மா இஸ்மாயில்
ஸ்கூலில் உதவி தலைமை ஆசிரியை. அப்பா, அம்மாவுக்கு தெரிந்தவர்கள்
அதிகம். அது சின்ன ஊர். எல்லோரையும் எல்லோருக்கும் தெரியும். புகையை உள்ளே இழுத்து வெளியே விடுவதற்குள் அவர்களுக்கு சேதி போய்விடும்.

அதனால் நான் பள்ளி முடியும் வரை புகையை தொடாமலே இருந்தேன்
மதுரை S .V . N கல்லூரியில் Chemistry சேர்ந்தேன். அங்கு hostel இல் இருந்த
மக்கள் கேட்ட போது கூட எனக்கு பழக்கம் இல்லை என்று மறுத்த நான்,
புகைக்க ஆசைப்பட்டது ஒரு படத்தை பார்த்து. அண்ணாமலை படத்தில்
ரஜினி ஒரு சிகரட் பிடித்து கொண்டு வருவார்ரொம்ப  ஸ்டைல் ஆன இடம் அது. Moore  சிகரட் என்று பெயர்.  ராயல் பிரவுன் கலரில தங்க நிற  வளையத்துடன் இருக்கும். என் நண்பன் ஒருவன்அது பொம்பளை குடிக்கிற
சிகரட் என்றான். போடா தலைவரே குடிசிருக்காறுன்னு சொல்லிட்டு வாங்கினேன். அந்த சிகரட் எல்லா கடையிலும் கிடைக்காது.அதற்கென்று  மதுரை சென்று  ஒரு கடையில் வாங்கிமனதுக்குள் தலைவரை நினைத்து கொண்டு இழுத்தால் புகை வெளியே வரவில்லைஇருமல் தான் வந்ததுசரி 
இந்த சிகரட் தான் இப்டின்னு வேற  ஒரு சிகரட் எடுத்தால் அதுவும்  அதே
கதை.சரி கழுத, காசக் குடுத்து இருமல் வாங்குவானேன் என்று அறச்சீற்றம் கொண்டேன்விட்டதடி ஆசை விளாம்பழம் ஓட்டோட என்பார்கள், எனக்கு விட்டதடி ஆசை moore    சிகரெட்டோட என்று நினைத்து கொண்டேன். இப்போது நினைத்தால் எவ்வளவு பெரிய ஆபத்தில் இருந்து தப்பித்திருகிறேன் என்று தெரிகிறதுஎல்லோராலும் புகை பழக்கத்தை விட முடியாதுஏனென்றால் 
நம்மை டெம்ப்ட் பண்ண நிறைய புகைக்கும் ஆட்க்கள் நம்மை சுற்றி
இருக்கிறார்கள்அதனால் அதை தொடாமல் இருப்பதே நல்லது.

என் பிரியமான பாலகுமாரன் அவருடைய  புகை அனுபவத்தை தினகரனில் 
எழுதியிருக்கிறார் படியுங்கள்.  நிச்சயம்  உங்கள் மனதில் மாற்றம் வரும்.


2 comments:

  1. உங்கள் கட்டுரையும் எழுத்து சித்தரின் கட்டுரையும் நல்ல விழிப்புணர்வு ஊட்டும் வகையில் அமைந்துள்ளது... தன் வாழ்க்கையையே எடுத்து விவரித்த எழுத்து சித்தரின் கட்டுரையை படித்தால் எவ்வளவு பெரிய புகையாளராக இருந்தாலும் புகையை விட்டொழிப்பார்.....

    ReplyDelete
  2. @பத்மநாபன் : வருகைக்கு நன்றி. நான் பாலகுமாரனின் தீவிர வாசகன்

    ReplyDelete