டிவியில் சில நிகழ்ச்சிகளை பார்க்கும் போது நிகழ்ச்சி நடத்துபவர்களை விட அதில் பங்கு பெறுபவர்கள் தங்களின் தனி திறமையால் அந்த நிகழ்ச்சியை வேறு ஒரு தளத்துக்கு எடுத்து செல்வார்கள்.அதற்கு உதாரணமாக சிவகர்த்திகேயனை சொல்லலாம். ஜெயிக்க போவது யாரு நிகழ்ச்சியில் வந்து தனக்கென ஒரு இடத்தை சின்ன திரையிலும், வெள்ளி
திரையிலும் பிடித்துள்ளார்.
"நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சியில் சில சமயம் அப்படி சிலர் வருவதுண்டு. நேற்று நான் வீட்டில் நுழையும் போதே என் மகன் அருள்
"அம்மா பேகம் தான் வரணும்" என்று சொன்னான். ஏறிட்டு பார்த்தால்
டிவியில் "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சியில்
விளையாடுபவர்களை தேர்ந்தெடுக்க ஒரு மொக்கையான கேள்வியை
கேட்டு தேர்ந்தெடுப்பது நடந்து கொண்டிருந்தது. அருள்
நினைத்தபடி ரஹிலா பேகம்தான் மூணு வினாடியில் சொல்லி
விளையாட தேர்ந்தெடுக்க பட்டார்.
பார்த்தால் கல்லூரி மாணவி மாதிரியான தோற்றம். ஒரு குழந்தைக்கு தாய்.
கணவர் மற்றும் அம்மாவுடன் வந்திருந்தார். அவர் பற்றிய கிளிப்
ஒளி பரப்பினார்கள்.சும்மா கிழிச்சு எடுத்திருச்சு, பஞ்ச் டயலாக்ஸ் வேற.
கிளிப் கடைசியில் "ஏ நானும் ரவுடி தான், நானும் ரவுடி தான் நானும்
"நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" கழ்ச்சியில் கலந்துக்க போறேன்னு
சொன்னது தான் ஹை லைட்.
சூர்யா இந்த ஷோவில் இப்படி சிரிச்சு பார்த்ததில்லை. சில பஞ்ச் டயலாக்ஸ்
1 ) பத்தாயிரம் உறுதி பணம் முடித்தவுடன் "நல்ல வேளை பத்தாயிரமாவது
கிடைக்கும், இல்லேனா எதிர் கட்சிக்காரன் பார்த்தா என்ன நினைப்பான்".
2 ) தன் குடும்பத்தை பற்றி சொல்லிவிட்டு "பாமிலி டோடல் டேமேஜ்"
3 ) தன் கணவர் ரொம்ப கேள்வி கேட்டுக்கொண்டு இருப்பார் என்று சொல்லி
விட்டு "இப்படிதான்ஒரு தடவை சுடிதார கண்டுபிடிச்சது யாருன்னாரு,
என்னலேயே முடியலேன்ன பார்த்துக்கோங்க"
இவர் ஒரு சினிமா பிரியர். மொக்க படமாக இருந்தாலும் டைட்டிலில்
இருந்து வணக்கம் போடும் வரை பார்ப்பவர். பாரதியாரின் பாடல்கள் பிடிக்கும்.
நிறைய புத்தகங்களை படித்திருக்கிறார். சூர்யா "இவர் ஒரு என்ட்டர்டெய்னர்"
என்று ஒன்றுக்கு இரண்டு முறை நேற்று ஷோவில் சொன்னார்.நேரம்
இல்லாததால் இன்றும் இவருடைய ரகளை தொடரும். என்னால்
முடிந்தவரை என் எழுத்தில் இவர் ரகளையை கொண்டு வந்திருக்கிறேன்.
இது சும்மா ட்ரைலர். மெயின் பிக்சர் இன்னைக்கு "நீங்களும்
வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சியில் பாருங்க. மறக்காம !
It was fun. But mostly she spoke Film comedy dialogues
ReplyDelete@Mohan Kumar : Thanks for coming. Yes, but it is interesting according to the situation.
ReplyDeleteஇன்று தான் இங்கு ஒளிபரப்பானது...ரஹிலா சரியான ரகளை..... சூர்யா முடிக்க மனமில்லாமல் முடித்தார்... நல்ல பகிர்வு....
ReplyDeleteI liked that show very much...enjoyed her casual chat :-)
ReplyDelete@பத்மநாபன், @Suppandi : வருகைக்கு நன்றி !
ReplyDelete